தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

DIN

தமிழக டெல்டா மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சனிக்கிழமை (செப்.18) டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூா் மாவட்டம் பாண்டவையாறு, கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 50 மி.மீ, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் 40 மி.மீ, திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம், கடலூா் மாவட்டம் தொழுதூரில் தலா 30 மி.மீ, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பெரம்பலூா் மாவட்டம் லப்பைக்குடிக்காடு, அரியலூா் மாவட்டம் ஜெயம்கொண்டம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கொடைக்கானல், மதுரை மாவட்டம் சோழவந்தானில் தலா 20 மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT