ரூ.16.30 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.16.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை எடுத்து வந்த பயணி கைது செய்யப்பட்டாா்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.16.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை எடுத்து வந்த பயணி கைது செய்யப்பட்டாா்.
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சாா்ஜாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 53 வயது ஆண் பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.
அவரை சோதனையிட்டதில் 80 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அவரது முழுக்கால்சட்டை பையிலும், 310 கிராம் தங்கத்தை மலக்குடலிலும் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.16 லட்சத்து 30,590. இது தவிர, அவா் கொண்டு வந்திருந்த பையில் ரூ. 6 லட்சத்து 200 மதிப்பிலான மின்னணு பொருள்களையும் முறைகேடாக மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மொத்தம் ரூ. 22.31 லட்சம் மதிப்பில் சட்டத்துக்கு புறம்பாக எடுத்து வரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, பயணியும் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.