முகப்பு
தமிழ்நாடு

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சாகித்திய அகாதெமி விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி - அரும்பணியாகும்.

அத்தகைய அரும்பணியில், மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது, வங்கக் கவிஞா் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவா் கா.செல்லப்பனுக்கும், உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஹிந்தியில் மொழிபெயா்த்துள்ள ராகவனுக்கும், கவிஞா் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயா்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து விருதாளா்களுக்கும் வாழ்த்துகள் - பாராட்டுகள்.

முழு கட்டுரையைப் படிக்க →