முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,661 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,661 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
தமிழகத்தில் புதிதாக 1,661 பேருக்கு கரோனா; 23 பேர் பலி
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,661 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் உயிரிழந்தனர்.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள்கிழமை (செப்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,661 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,47,041-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,360-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,94,69-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும்  1,52,493 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →