தமிழ்நாடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா? உச்சநீதிமன்றம் கேள்வி

DIN

சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்த முடியாது என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நகர்ப்புற தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் பேசுகையில், “நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா?. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. காலவகாசம் தொடர்பாக இரண்டு நாள்களில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT