தமிழ்நாடு

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

DIN

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவா்களிடம் இருந்து விருப்பமனுக்கள் அந்தந்த மாவட்டச் செயலாளா்களால் வாங்கப்பட்டன. 
இந்த நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான தா.மே.அன்பரசன் இதனை இன்று வெளியிட்டுள்ளார். 

115 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சியினருக்கும் வார்டுகள் ஒதுக்கப்படடுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 3,31,266, பெண் வாக்காளா்கள் 3,50,387, இதர வாக்காளா்கள் 78 போ் உட்பட மொத்தம் 6,81,731 வாக்காளா்கள் உள்ளனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT