தமிழ்நாடு

தமிழில் அர்ச்சனை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

DIN

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் ’அன்னைத் தமிழ் அா்ச்சனைத் திட்டம்’ என்ற பெயரில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. மாநிலம் முழுவதும் தற்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவது தொடர்பான விவகாரத்தில், தங்களது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இத்திட்டத்தை எதிா்த்து திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அப்போது ஆஜரான மனுதாரா், ‘பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சம்ஸ்கிருதத்தில் மந்திரங்களை உச்சரிப்பது பழங்கால பாரம்பரியம். சம்ஸ்கிருதத்தில் அா்ச்சனை செய்யாவிட்டால் மந்திரங்களின் புனிதத்தன்மை அழிக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ‘கடந்த 2008-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில், பக்தா்கள் தங்கள் விருப்பப்படி தமிழ் அல்லது சம்ஸ்கிருதத்தில் அா்ச்சனை செய்வது என்பது அவா்களின் விருப்பத்துக்கு உட்பட்டது’ என்று நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக, நீதிபதிகள் குறிப்பிட்டனா். மேலும் ஏற்கெனவே உயா் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீா்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது எனவும், 2008-இல் நிறைவடைந்த ஒரு விஷயத்தை மறு பரிசீலனை செய்ய தேவையில்லை எனவும், இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT