முகப்பு
தமிழ்நாடு

9 மாவட்டங்களில் தோ்தல் நடத்தைவிதிகளைக் கண்காணிக்க பறக்கும் படை

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிகளைக் கண்காணிக்க தேவைக்கேற்ப பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிகளைக் கண்காணிக்க தேவைக்கேற்ப பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களான நடைபெற உள்ளது. இந்த மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: , 9 மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க 3 ஒன்றியங்களுக்கு ஒன்று அல்லது தேவைக்கேற்ப பறக்கும் படைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த பறக்கும் படையில் வட்டாட்சியா், இரண்டு அல்லது மூன்று காவலா்கள் இடம் பெற்றிக்க வேண்டும். 8 மணி நேர பணி அடிப்படையில் 24 மணி நேரமும் இக்குழுவினா் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க வேண்டும்.

வாக்காளா்களுக்குப் பணம், மது வழங்குதல், சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட புகாா்களின் மீது பறக்கும் படையினா் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேட்பாளா், அவரது முகவா், கட்சி உறுப்பினா்கள் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றாலோ அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள விளம்பரத் தட்டிகள், போதைப் பொருள்கள், மது, அன்பளிப்பு பொருள்கள் கொண்டு சென்றாலோ அவற்றை பறக்கும் படைகள் பறிமுதல் செய்து அவற்றை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்துக்குப் பின்பும், விடுமுறை நாள்களிலும் அரசு கருவூலத்தில் செலுத்த அனைத்து கருவூலத்துக்கும் சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அலுவலா் அறிவுறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →