முகப்பு
தமிழ்நாடு

கோடியக்கரையில் கலங்கரை விளக்க நாள் கொண்டாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கலங்கரை விளக்க தினத்தையொட்டி கொடியேற்றி இன்று (செப்.21) கொண்டாடப்பட்டது.

Updated On : 21 செப்டம்பர், 2021 at 4:26 PM
கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கலங்கரை விளக்க தினத்தையொட்டி கொடியேற்றி இன்று (செப்.21) கொண்டாடப்பட்டது.

கோடியக்கரையில் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் சேதமடைந்த நிலையில் கடலோரத்தில் அதன் எஞ்சிய பகுதி அரிதாக காணப்படுகிறது.

இவைதவிர, கோடியக்கரையில் சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.

Advertisement

மேலும், சுதந்திரத்துக்கு பிறகு அமைக்கப்பட்ட ஆசியாவிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கங்களில் ஒன்றான புதிய கலங்கரை விளக்கமாக அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், 94 -வது கலங்கரை விளக்க தினத்தையொட்டி  புதிய கலங்கரை விளக்க வளாகத்தில் கலங்கரை விளக்க பொறுப்பு அதிகாரி கண்ணன் கலங்கரை விளக்கக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.