சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்க்குள்ளான தனியார் வேன். 
தமிழ்நாடு

சிவன்மலை அருகே தனியார் பஞ்சாலை கூலி ஆள்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 12 பேர் காயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் தனியார் பஞ்சாலை கூலி ஆள்களை ஏற்றிச் சென்ற  வேன் கவிழ்ந்து விபத்க்குள்ளானது. 

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் தனியார் பஞ்சாலை கூலி ஆள்களை ஏற்றிச் சென்ற  வேன் கவிழ்ந்து விபத்க்குள்ளானது. 

தேனியிலுள்ள தனியார் பஞ்சு ஆலைக்கு சின்னமனூர், பூலநந்தபுரம், கோவில்பட்டி போன்ற பகுதியில் இருந்து கூலித் தொழிலாளர்கள் பஸ் மற்றும் வேன்களில் சென்று வருகின்றனர் .

அவ்வாறு செவ்வாய்க்கிழமை காலையில் 12 ஆண் - பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் வேன் எதிர்பாராதவிதமாக சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் காயமடைந்த 12 பேரையும் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

டிராக்டா் மோதியதில் பெண் காயம்

காலனியாதிக்க கொள்கை

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

SCROLL FOR NEXT