தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில்: நாளை முதல் காலை 5 - இரவு 8 வரை பக்தர்களுக்கு அனுமதி

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை  (வியாழக்கிழமை) முதல் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் கூடுதல் நேரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (செப். 23) முதல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும்.

எனவே, பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு உத்தரவுப்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

SCROLL FOR NEXT