தமிழ்நாடு

தாம்பரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி

DIN


சென்னை: சென்னை தாம்பரம் அருகே சாலை தடுப்பில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் முன்னாள் சென்ற பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பியபோது சிக்னல் பகுதியில் இருந்த சாலை தடுப்பில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் கடலூரை சேர்ந்த ஐசக்ராஜ், உத்திரமேரூர் சுந்தரராஜன், புதுச்சேரி நாகமுத்து என தெரியவந்துள்ளது. காயமடைந்த 3 பேரும் கட்டடத் தொழிலாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

விபத்துக்கு காரணமான தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT