உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் துவக்க விழா
உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் துவக்க விழா வியாழக்கிழமை நடந்தது.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் துவக்க விழா வியாழக்கிழமை நடந்தது.
உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணி நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் முத்து, சுகாதார ஆய்வாளர்கள் சரவண பிரபு, சசிகலா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்களை மற்றும் சாக்கடைகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரினர்.
மழைக் காலங்களில் கால்வாயில் நீர் தேங்காமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக சாக்கடைகள் கால்வாய்கள் ஊரணிகள் தூர்வாரும் பணியில் நகராட்சி நிர்வாகம் துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.