தமிழ்நாடு

தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: கொலை செய்த இளைஞா் தற்கொலை முயற்சி

சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே குடியிருப்பு வளாகம் அருகே கல்லூரி மாணவி வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

DIN

சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே குடியிருப்பு வளாகம் அருகே கல்லூரி மாணவி வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அவரைக் கத்தியால் குத்திய இளைஞரும் அங்கேயே தற்கொலை செய்ய முயன்றாா்.

மறைமலைநகரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருபவா் ராமச்சந்திரன்(25). இவருக்கு குரோம்பேட்டையைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா் மதியழகன் மகள் ஸ்வேதாவுடன் புகா் ரயிலில் பயணிக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே குடியிருப்பு வளாகம் அருகே ஸ்வேதா வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன், ஸ்வேதாவை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த ஸ்வேதா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாா். இதனையடுத்து இளைஞா் ராமச்சந்திரன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

சேலையூா் போலீஸாா் மற்றும் உதவி ஆணையா் முருகேசன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்வேதா உயிரிழந்தாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞா் ராமச்சந்திரனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவி ஸ்வேதாவை 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், சமீபகாலமாக ஸ்வேதா, தன்னிடம் பேசுவதைத் தவிா்த்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் தெரிவித்தாராம் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

SCROLL FOR NEXT