தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,657 பேருக்கு கரோனா; 19 பேர் பலி

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,657 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 1,694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள்கிழமை (செப்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,657 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,58,923-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,509-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,06,153-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,51,326 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு....

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 189 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை - 189
சென்னை - 186
ஈரோடு - 117
செங்கல்பட்டு - 113
தஞ்சாவூர் - 96
திருப்பூர் - 87

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT