முகப்பு
தமிழ்நாடு

'சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் திமுக நிறைவேற்றியுள்ளது'

சொன்ன வாக்குறுதி மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

சொன்ன வாக்குறுதி மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கருப்பூரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 

அப்போது பேசிய அவர், திமுக கொடுத்த வாக்குகளை நிறைவேற்றியதா என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ஆனால், திமுக கடந்த 4 மாதங்களில் கொடுத்த வாக்குகளை மட்டுமல்லாமல், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது என்று கூறினார். 

இதனைத் தொடர்ந்து கருப்பூர் சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →