தமிழக அரசு 
தமிழ்நாடு

மதுரவாயல்-துறைமுகம் இடையே இரண்டு அடுக்கு பறக்கும் சாலை: நெடுஞ்சாலைத்துறை

மதுரவாயல் - துறைமுகம் இடையே அமைக்கவுள்ள பறக்கும் சாலையை இரண்டு அடுக்காக கட்டவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ்குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

மதுரவாயல் - துறைமுகம் இடையே அமைக்கவுள்ள பறக்கும் சாலையை இரண்டு அடுக்காக கட்டவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ்குமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை செயலாளர் வெளியிட்ட செய்தியில்,

“மதுரவாயல் - துறைமுகம் இடையே இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமைப்பதற்கான சாலை திட்டம் அமையவுள்ளது. எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் விரிவான திட்டறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இரண்டு அடுக்குகளாக அமையவுள்ள சாலையில் முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர்கள் செல்லும் வகையில் அமைக்கப்படும்.”

கடந்த 2008ஆம் ஆண்டு ரூ.1,500 கோடி மதிப்பில் சுமார் 19கி.மி. நீளமுள்ள மதுரவாயல் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இத்திட்டத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திமுக, இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் EPS! | ADMK

தெருநாய்கள் தொல்லை: சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

SCROLL FOR NEXT