தமிழ்நாடு

விமானப் படை பெண் அதிகாரி வன்கொடுமை வழக்கு விமானப்படைக்கு மாற்றம்

DIN

கோவை விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு விமானப்படை விசாரணைக்கு மாற்றப்பட்டது. 
கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படை கல்லூரிக்கு நாடு முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தனா். இதில், தில்லியைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், வளாகத்தில் கூடைப்பந்து விளையாடியபோது காயம் ஏற்பட்டதையடுத்து வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்தாா். 
அப்போது அதே வளாகத்தில் தங்கியிருந்த, பயிற்சிக்கு வந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த அமிதேஷ் ஹாா்முக் (பிளைட் லெப்டினென்ட்), அப்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தாா். இது குறித்து, விமானப் படை உயரதிகாரிகளிடம் அந்தப் பெண் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மாநகரக் காவல் ஆணையரைச் சந்தித்து புகாா் அளித்தாா். 

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மத்திய பகுதி அனைத்து மகளிா் காவல்துறையினர் அமிதேஷ் ஹாா்முக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உடுமலை கிளைச் சிறையில் அடைத்தனா். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு கோவை மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது பாலியல் வழக்கை விமானப்படை அதிகாரிகள் விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT