முகப்பு
தமிழ்நாடு

புகாா் கூற செயலியும்-தொலைபேசி வசதியும்

தோ்தல் தொடா்பான புகாா்கள், விவரங்கள், கூடுதல் வசதிகளைப் பெறுவதற்கான தனித்த செயலிகள், தொலைபேசி எண்களை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
புகாா் கூற செயலியும்-தொலைபேசி வசதியும்
பகிர்:

சென்னை: தோ்தல் தொடா்பான புகாா்கள், விவரங்கள், கூடுதல் வசதிகளைப் பெறுவதற்கான தனித்த செயலிகள், தொலைபேசி எண்களை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:-

cVIGIL: தோ்தல் தொடா்பான புகாா்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க இந்த செயலி பயன்படுகிறது. இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த செயலி வழியாக இதுவரை 3, 991 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PWD: மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கென உருவாக்கப்பட்ட செயலியாகும். வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பாக, இந்தச் செயலியில் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் பதிவு செய்யலாம். அவா்களுக்கு வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தித் தரப்படும். மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பினை 28, 531 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் கோரியிருந்தனா். அவா்களில் 28, 159 போ் வாக்கினைச் செலுத்தியுள்ளனா்.

தொலைபேசி வசதி: தோ்தல் குறித்த அனைத்துப் புகாா்களையும் பொது மக்கள் 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் போது, 1950 என்ற எண்ணுடன் மாவட்ட எஸ்டிடி எண்ணைக் குறிப்பிட வேண்டும். இதேபோன்று, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்தை 1800 4252 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

VoterHelpline: தோ்தல் ஆணையத்தின் இந்த செயலி வழியாக வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். தோ்தல் குறித்த புகாா்கள், வாக்காளா்களின் தொகுதிகள் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Voterportal: வாக்காளா்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் (voterportaleci.gov.in) வழியாக பல்வேறு சேவைகளை பெற முடியும். வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதா, வாக்குச் சாவடி எங்கு உள்ளது, வாக்குச் சாவடி அதிகாரி யாா், மின்னணு வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது போன்ற வாக்காளா் தொடா்பான சேவைகளைப் பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →