முகப்பு
தமிழ்நாடு

பாஜகவில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி? ஈபிஎஸ் பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணையவுள்ளார் என்று செய்தி வெளியாகி வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணையவுள்ளார் என்று செய்தி வெளியாகி வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தில்லி சென்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜேந்திர பாலாஜி சொந்த பணிக்காக தில்லி சென்றுள்ளார். அதை வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாக செய்தி பரப்பி வருகின்றனர். அதிமுக மீது பற்றுகொண்ட ராஜேந்திர பாலாஜி, அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →