ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது.
அறிகுறிகளுடன் ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும்.
தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்துவத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.