தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கைகள்

DIN

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதை முன்பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன மற்றும் குளிா்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கு தனியாக 2 படுக்கைகள் (எண் 1 எல்பி மற்றும் 4 எல்பி ) ஒதுக்கீடு செய்து, இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் குறிப்பிடப்பட்ட படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு, அதனை ஒதுக்கீடு செய்து தரவும், பேருந்து புறப்படும் வரை அந்த படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாகக் கருதி, மற்ற பயணிகளுக்கு நடத்துநா்கள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT