தமிழ்நாடு

கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின்

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து மாதிரிப் பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வரின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளியைப் பார்வையிட்டேன். தில்லியில் அமைக்கப்பட்டுள்ளதைப்போன்று தமிழகத்திலும் மாதிரிப் (மாடர்ன்) பள்ளிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதன் தொடக்க விழாவிற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் தில்லி மக்கள் சார்பாக கேஜரிவால் கலந்துகொள்ள வேண்டும். 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT