தமிழ்நாடு

போடி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: நாடகமாடியவர் கைது

போடி அருகே சக தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காணவில்லை என நாடகமாடியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

DIN


போடி:  போடி அருகே வியாழன் கிழமை இரவு, சக தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காணவில்லை என நாடகமாடியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போடி அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் குருசாமி மகன் முருகன் (53). இவர் போடி ஊத்தாம்பாறை புலத்தில் தனியார் தோட்டத்தில் தங்கி மாடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதே ஊரைச் சேர்ந்த பொன்னையா மகன் ஜெகதீஸ்வரன் என்ற பாபு என்பவரும் முருகனுடன் தோட்டத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெகதீஸ்வரன், தோட்ட உரிமையாளரிடம் சென்று முருகனை காணவில்லை எனக் கூறியுள்ளார். முருகனை தேடியதில் தோட்டத்திற்கு அருகே உள்ள வாய்க்காலில் முருகன் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து குரங்கணி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவில் போலீஸார் தோட்டத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் முருகனும், ஜெகதீஸ்வரனும் ஒன்றாக மது அருந்தியதும், பின்னர் இருவரும் சண்டையிட்டதும், முருகனை ஜெகதீஸ்வரன் அரிவாளால் வெட்டியதும், அவரது சடலத்தை இழுத்துச் சென்று வாய்க்காலில் போட்டதும் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து முருகனை கொலை செய்ததை ஜெகதீஸ்வரன் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து முருகனின் மனைவி மாரியம்மாள் (46) கொடுத்த புகாரின் பேரில் குரங்கணி போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்ரவனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

பிகார் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!

16 அடி பாய்ந்த குட்டி... மகனால் பெருமையடைந்த விக்ரம்!

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? தேஜஸ்வி படம் மட்டும்! வறுத்தெடுக்கும் பாஜக

SCROLL FOR NEXT