முகப்பு
தமிழ்நாடு

விபத்தில் தானாகச் சென்ற இருசக்கர வாகனம்: வைரல் விடியோ

இருசக்கர வாகன விபத்தில் மாணவன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாலும், வாகனம் மட்டும் நிற்காமல் சில அடி தூரம் தானாகச் சென்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
சிசிடிவி காட்சியில் விபத்து மற்றும் தானாகச் சென்ற இருசக்கர வாகனம்
பகிர்:

கோவை குறிச்சி பகுதியின் ஒரு வழிப்பாதையில் கல்லூரி மாணவர் இரு சக்கரத்தில் செல்கையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார்.

இதில் கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தின்போது மாணவன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாலும், இரு சக்கர வாகனம் மட்டும் நிற்காமல் சில அடி தூரம் தானாகச் சென்றது. எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் சிறிது தூரம் சென்று கீழே விழுந்தது.

விபத்து மற்றும் இரு சக்கர வாகனம் தானாகச் சென்ற விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →