தமிழ்நாடு

டெண்டா் முறைகேடு.. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது: தமிழ்நாடு அரசு

DIN


மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடா்புடைய விவகாரத்தில் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவா் எஸ்.பி.வேலுமணி. சென்னை மாநகராட்சி மற்றும், கோவை மாநகராட்சியின் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை அவரின் பினாமி நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆா்.எஸ். பாரதி, அறப்போா் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேஷ் ஆகியோா் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில்,‘எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டா் முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவை எதிா்த்து எஸ்.பி. வேலுமணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை வரவுள்ள நிலையில், மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடா்புடைய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளது என்றும், இந்த வழக்கில் அவருக்கு எந்தவித சலுகையும் வழங்க கூடாது என்று வேலுமணியின் மேல்முறையீட்டுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT