தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

DIN


எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை மொத்தம் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன.

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT