தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்கக் கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

DIN

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

இதுதொடர்பான கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை மக்களவைத் தலைவரிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இன்று வழங்கி உள்ளார். அதில் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 3 சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் இதுகுறித்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தனது நோட்டீஸில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அதில், ''மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அமைதி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துக்கள'' என்று அவர் பதிவிட்டிருந்தார். தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT