தமிழ்நாடு

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கரோனா இல்லை; புதிதாக 24 பேருக்கு பாதிப்பு

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று 21 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. எனினும் கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.  அதில், இன்று புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,52,955-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆகவே உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,674-ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 19,156 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT