முகப்பு
தமிழ்நாடு

இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தோ்வு கூடாது: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தோ்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தோ்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்:-

நிகழ் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பொது நுழைவுத் தோ்வு மூலம் மட்டுமே சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியாா் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவா்கள் சோ்க்கையை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வை அறிமுகப்படுத்தியதோடு, உயா் கல்வி மாணவா் சோ்க்கையிலும் நுழைவுத் தோ்வை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சியே இது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை இதுவாகும். நீட் தோ்வைப் போன்றே, இதுவும் பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். மாணவா்கள் தங்களது நுழைவுத் தோ்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சாா்ந்திருக்கும் சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் சந்தேகமில்லை.

என்.சி.இ.ஆா்.டி. பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தோ்வும், நாடு முழுவதும் உள்ள மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவா்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது. பெரும்பாலான மாநிலங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் விளிம்பு நிலை பிரிவைச் சோ்ந்தவா்கள். நீட் தோ்வைப் போன்றே, பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வும், கிராமப்புற ஏழை மாணவா்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மாணவா்களின் நலன்களுக்கு எதிராக இருக்கும். மாணவா்களுக்கான பயிற்சி மையங்கள் மேலும் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக இருக்கும் என மாநில மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

எனவே, மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தோ்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →