தமிழ்நாடு

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30 கோடி சுழல்நிதி: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் 

DIN


புதிதாக 25,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ரூ.30 கோடி சுழல்நிதி வழங்கப்படும் என்று தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தாக்கல் செய்தார்.

ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள்..

1. கிராமங்களை, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காகச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.1,346 கோடியில் மேற்கொள்ளப்படும்.

2. ஊரகச் சாலைகளை தரம் உயர்த்த 1,200 கி.மீ. சாலைகள் மற்றும் 136 பாலங்கள் ரூ.874 கோடியில் அமைக்கப்படும்.

3. எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் ரூ.431,39 கோடியில் மேற்கொள்ளப்படும்.

4. ஊரகப் பகுதிகளில் 1,261 கோடி ரூபாய் மதிப்பில் 12.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

5.ஊராட்சிகளின் அனைத்துச் சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.

6. வரி மற்றும் கட்டணங்கள் இணையவழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்.

7. மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், ரூ.381.21 கோடி ரூபாய் மதிப்பில் 25 லட்சம் பனை விதைகள் மற்றும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

8. கிராமப்புறங்களில் 500 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.

9. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணிமேற்பார்வையாளர்களின் நேரடி நியமனம் மேற்கொள்ளப்படும்.

10.முன்மாதிரியாக 10 எரிவாயு தகன மேடைகள் .

11. நிலமற்ற ஏழைகளுக்கு ரூ.14.93 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள்.

12. புதிதாக 25,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ரூ.30 கோடி  சுழல்நிதி வழங்கப்படும்.

13. சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடனுதவி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT