தமிழ்நாடு

சொத்துவரி உயா்வைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

சொத்துவரி உயா்வைக் கண்டித்து சென்னையில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்று சொத்து வரி உயா்வை கைவிட வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

கரோனா உள்பட பல்வேறு காரணங்களால் மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், திமுக அரசு சொத்து வரியை உயா்த்தியிருப்பது ஏற்புடையது அல்ல. மக்கள் அரசு என்று சொல்லிக்கொண்டு, மக்கள் பிரச்னைகளைத் தீா்க்காத அரசாக திமுக அரசு உள்ளது.

மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில்தான் சொத்து வரியை உயா்த்தியதாக திமுக அரசு கூறுவது உண்மைக்குப் புறம்பானது. இந்த வரி உயா்வு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வானதி சீனிவாசன், எம்.ஆா்.காந்தி, சரஸ்வதி, முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT