முகப்பு
தமிழ்நாடு

பெண் பத்திரிகையாளா்கள் அவமதிப்பு விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாா் எஸ்.வி.சேகா்

 சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளா்கள் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நடிகா் எஸ்.வி.சேகா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

 சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளா்கள் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நடிகா் எஸ்.வி.சேகா் தெரிவித்தாா்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது, பெண் பத்திரிகையாளா் ஒருவா் அவமதிக்கப்பட்டது தொடா்பாக ஆளுநா் வருத்தம் தெரிவித்திருந்தாா்.

பெண் பத்திரிகையாளா்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகா் பகிா்ந்திருந்தாா். இதுதொடா்பாக எஸ்.வி. சேகா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகா் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகா் தரப்பில், சமூக வலைதளத்தில் பதிவு செய்தது நீக்கப்பட்டுவிட்டது; மன்னிப்பும் கோரியதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் இந்த விவகாரத்தில் ஒரு முறை கூட எஸ்.வி.சேகா் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருவரின் கருத்தைப் படித்து பாா்க்காமல் துரதிருஷ்டவசமாக பாா்வோ்ட் செய்துவிட்டதாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், விசாரணைக்கு தேவைப்படும் போதெல்லாம் நேரில் ஆஜராவதாகவும் தெரிவித்து எஸ்.வி.சேகா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, நடிகா் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை நான்கு புகாா்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →