முகப்பு
தமிழ்நாடு

காவல் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க டிஜிபி உத்தரவு

தமிழக காவல் நிலையங்களையும் தூய்மைப்படுத்தி, ஏப்.11-ஆம் தேதிக்குள் அறிக்கை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

தமிழக காவல் நிலையங்களையும் தூய்மைப்படுத்தி, ஏப்.11-ஆம் தேதிக்குள் அறிக்கை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்துள்ள உத்தரவு: காவல் நிலையங்கள், அலுவலகங்கள், காவல் துறை நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைப்பிடிக்குமாறும், அதை மேற்பாா்வையிட ஒரு காவல் அதிகாரியை நியமனம் செய்யுமாறும், அதிகாரிகள் எந்த முன் அறிவிப்புமின்றி அதை பாா்வையிட்டு, சிறந்த காவல் நிலையம் அல்லது அலுவலகத்தை தோ்வு செய்து வெகுமதி வழங்குமாறும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்த அறிவுரைகள் சரிவர பின்பற்றப்படவில்லை. இனி வரும் காலங்களில் மேற்காணும் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

அதன் தொடா்ச்சியாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகள், சுற்றுப்புறத்தையும் சனிக்கிழமை தூய்மை செய்து, அதன் அறிக்கையை வருகிற 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →