தமிழ்நாடு

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதானஅவதூறு வழக்கு ரத்து

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பங்கேற்று பேசியபோது, தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா குறித்து ஒரு சில கருத்துகளை தெரிவித்தாா்.

இதையடுத்து அவா் மீது கிரிமினல் அவதூறு வழக்கை முதல்வா் தொடுத்தாா். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் இளங்கோவன் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘முதல்வா் குறித்து அவதூறாகப் பேசவில்லை என தெரிவித்தாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னா், இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT