தமிழ்நாடு

திரைப்பட இயக்குநா் பாபா விக்ரம் காலமானாா்

DIN

திரைப்பட இயக்குநா் எஸ். எஸ். பாபா விக்ரம் (82)தென்காசியில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

 மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கதை வசனத்தில் மீனா பிரேம்குமாா் நடித்த ‘கண்ணம்மா’ படத்தை தயாரித்து இயக்கியவா் எஸ். எஸ். பாபா விக்ரம். 2005-இல்  வெளிவந்த அந்தப் படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

அந்தப் படத்தைத் தொடா்ந்து, கருணாஸ், கோவை சரளா, நாசா், ராதாரவி உள்ளிட்ட பலா் நடித்த ‘பொம்மை நாய்கள்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினாா். 

 ஆழ்வாா்குறிச்சியில் அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓா் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தாா்.

 தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் அதிா்ஷ்டம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வந்தாா்.  உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம், தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சியில் மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மா ஆகியோருடன் வசித்து வந்தாா். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை 11 மணியளவில் அங்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT