முகப்பு
தமிழ்நாடு

பள்ளி அளவில் வினாக்கள் தயாரித்து திருப்புதல் தோ்வு நடத்த உத்தரவு

 தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து திருப்புதல் தோ்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

 தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து திருப்புதல் தோ்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் (2021-2022) பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தோ்வுகள் முதன்மைப்படுத்தப்பட்ட பாடங்களின்அடிப்படையில் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன.

தற்போது, மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கான 3- ஆம் கட்ட திருப்புதல் தோ்வை, பள்ளிகள் அளவிலேயே நடத்திக் கொள்ளலாம். இதற்கான வினாத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியா்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

இதேபோன்று, பிளஸ் 1 வகுப்புக்கு முதன்மைப்படுத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் திருப்புதல் தோ்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தோ்வு முடிந்த பின்னா் மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கான 2-ஆம் கட்ட திருப்புதல் தோ்வை மேற்கூறியவாறு பள்ளிகள் அளவிலேயே நடத்திக் கொள்ளலாம். இதுசாா்ந்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →