முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் ஜூலை மாதத்துக்குள் நடமாடும் உணவகக் கொள்கை

தில்லியில் ஜூலை மாதத்துக்குள் நடமாடும் உணவகக் கொள்கை கொண்டுவர வாய்ப்புள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

தில்லியில் ஜூலை மாதத்துக்குள் நடமாடும் உணவகக் கொள்கை கொண்டுவர வாய்ப்புள்ளது. இது இரவு நேர பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும், உணவு, பானங்கள் தொழிலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்தக் கொள்கை குறித்த அறிவிப்பை தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மாா்ச் 26-ஆம் தேதி வெளியிட்டாா். பல்வேறு நிறுவனங்களுக்கு உணவுகளைத் தயாரிக்கும் ‘கிளவுட் கிச்சன்’களுக்கு நிலம் வழங்குதல், முக்கிய உணவு மையங்களை மீண்டும் மேம்படுத்துதல், தேசிய தலைநகரில் நடமாடும் உணவகக் கொள்கையை கொண்டுவருதல் போன்ற அம்சங்கள் தில்லி அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, தில்லியின் முதல் நடமாடும் உணவகக் கொள்கையை ஜூலை மாதத்துக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது. இது இரவு நேர பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் உணவு மற்றும் பானங்கள் தொழிலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கொள்கையில் தரமான உணவுகள், தனித்துவமான உணவுகள் குறித்த கருத்துகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

முன்னதாக, தில்லி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த சிசோடியா, ‘இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நகரில் குறிப்பிட்ட இடங்களில் நடமாடும் உணவகங்களை அனுமதிக்கும் கொள்கையை அரசு தயாரித்து வருவதாகவும், இது தில்லியின் இரவு நேரப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →