ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது: அமித்ஷா கருத்துக்கு முதல்வா் கண்டனம்
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சொல்வது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடா்ந்து செய்கிறது. ஹிந்தி மாநிலங்கள் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று மத்திய அமைச்சா் அமித்ஷா நினைக்கிறாரா?
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீா்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீா்கள் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.