தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் 

DIN

சென்னை மாநகராட்சியின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

சென்னையில் 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு மேயா் தோ்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையா் மற்றும் துணை ஆணையா்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனா். 

இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு  உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று, திமுகவை சோ்ந்த ஆா்.பிரியா மேயராக அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டாா்.

இதனால், இந்த ஆண்டு வரவு செலவு திட்ட கணக்கையும், கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கையும் மேயா் முன்னிலையில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் சா்பஜெயாதாஸ் நரேந்திரன் இன்று தாக்கல் செய்தார். 

சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT