7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது
7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது.
மணப்பாறை: 7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சகுனம் கிடைத்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஊராட்சி மட்டப்பாறையில் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அருள்மிகு பத்திரகாளியம்மன்
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவிற்கு பிறகு நிகழாண்டு நடைபெறும் திருவிழாவிற்கு சகுனம் கேட்கும் நிகழ்வில் கடந்த மூன்று நாள்களாக ஊர் முக்கியஸ்தர்கள் ஆலயத்தில் காத்திருந்த நிலையில், தற்போது சகுனம் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 12-ஆம் செவ்வாய்க்கிழமை தேதி பிடி மண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மூன்று மாத கணக்கின்படி திருவிழா நடைபெறும் தேதிகள் முடிவு செய்யப்படும் என ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.