தமிழ்நாடு

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே லாரி ஓட்டுனர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

DIN

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

சத்தியமங்கலம் புலிகள் காப்பம், திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள
திம்பம் மலைப்பாதையில் 10 சக்கர லாரிகள் மற்றும் 16.2 டன் எடைக்கு குறைவாக உள்ள இலகுரக  வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், உள்ளூர் விவசாயிகள் இரவில் பயணிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வனத்துறை மற்றும் காவல்துறையினர் நேற்று முதல் அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடியில் 16.2 டன்னுக்கு  குறைவாக  பாரம் ஏற்றி வரும் லாரிகளின் ஆவணங்களை சரிபார்த்த பிறகு வனத்துறையினர் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து கர்நாடகத்துக்கு செல்லும் 10 சக்கரம் கொண்ட சரக்கு லாரி  பண்ணாரி சோதனைச்சாவடிக்கு வந்தது. அங்கு வனத்துறையினர் லாரியின் ஆவணங்களை சரிபார்த்தபோது 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் உள்ளதால் அனுமதிக்க முடியாது திருப்பி அனுப்பினர்.

இதனால் வனத்துறையிருக்கும் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநரை அப்புறப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள் லாரிகளை பண்ணாரி சோதனைச்சாவடியில் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகத்தில் இருந்த கோவை, சத்தியமங்கலம் வந்த பேருந்துகள் 1 கிமீ தூரம் வரை அணிவகுத்து நின்றன.

போராட்டம் காரணமாக பயணிகள் குழந்தைகளுடன் 1 கி மீ தூரம் வரை நடந்து சென்றனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் இன்று ஒரு நாள் இலகு ரக வாகனங்கள் அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை ஏற்று அனுமதிக்கப்பட்டதால் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

SCROLL FOR NEXT