முகப்பு
தமிழ்நாடு

இளம் பெண்களை கவர்ந்த கம்பம் ஆடும் விழா: கம்பத்தாட்டம் ஆடி மகிழ்வித்த இளைஞர்கள்

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் நடந்த கம்பம் ஆடும் விழாவில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பத்தை சுற்றிவந்து ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடனம் ஆடினர். 

Updated On : 11 ஏப்ரல், 2022 at 10:24 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:26 PM


சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் நடந்த கம்பம் ஆடும் விழாவில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பத்தை சுற்றிவந்து ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடனம் ஆடினர். 

சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் விழா கடந்த 6 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

விழாவையொட்டி, கோவில் முன் மிகப் பிரம்மாண்டமாக நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் நாள்தோறும் புனித நீர் ஊற்றி மஞ்சள் பூசி வழிபட்டனர். கோயிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 

Advertisement

இரவுநேரத்தில் பாரம்பரிய நிகழ்ச்சியான கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றி இளைஞர்கள் கம்பம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு கம்பத்தாட்டம் ஆடினர். மத்தாள இசைக்கேற்ப இளைஞர் சலக்கை கட்டி ஆடினர். கம்பத்தை சுற்றி வந்து ஆடும் இளைஞர்களின் கம்பத்தாட்டம் பெண்களை மிகவும் கவர்ந்தது. 

மத்தாள இசை இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஆசை ஏற்படுத்தியது. குழந்தைகளும் கம்பத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர். இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த கம்பம் ஆட்டம் நள்ளிரவு 2 மணி நீடித்தது. இளைஞர்களின் கம்பத்தாண்டம் வரும் புதன்கிழமை வரை நாள்தோறும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.