தமிழ்நாடு

‘புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்’: பேரவையில் புதிய அறிவிப்புகள்

DIN

தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்று பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்ந்த மானியம் குறித்து இன்று காலைமுதல் விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், உயர்க்கல்வி சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

அறிவிப்புகள்:

  • அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டப்படும்.
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுநிலை மாணவிகளுக்கு ரூ. 22.22 கோடி செலவில் இரண்டு விடுதிகள் கட்டப்படும்.
  • அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவியர்களுக்கான மூன்று அடுக்குகளுடன் விடுதி கட்டப்படும்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் டிட்கோ, சிப்காட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 11 மையங்கள் நிறுவப்படும்.
  • 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.
  • மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்லி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT