நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பாஜக வெளிநடப்பு
நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக தமிழக பேரவையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக தமிழக பேரவையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றது. மதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தொடர்ந்து பாஜக எம்.பி.ஏ. நயினார் நாகேந்திரன் பேசுகையில், நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்தார்.