தமிழ்நாடு

மத்திய பல்கலை. நுழைவுத் தேர்வுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்

DIN

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். 

தீர்மானத்தின் மீது முதல்வர் பேரவையில் பேசியதாவது: 

'மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில்கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல. 

அனைத்து மாணவர்களுக்கும் இது சமமான வாய்ப்பினை வழங்கிடாது. தமிழகத்தில் 70% மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்கள். 

இந்த பொது நுழைவுத் தேர்வு முறை, பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இதனால் பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை குறையும். 

நீட் தேர்வைப் போன்றே, இதற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும். இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள். எனவே, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்' என்று பேசியுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரவையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT