முகப்பு
தமிழ்நாடு

அரசியலிலிருந்து யாராலும் விரட்ட முடியாது: ஜெயக்குமாருக்கு சசிகலா பதிலடி

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலிலிருந்து யாராலும் விரட்ட முடியாது என்று ஜெயக்குமாருக்கு சசிகலா பதிலடி கொடுத்துள்ளார்.

Updated On : 12 ஏப்ரல், 2022 at 3:19 PM
அரசியலிலிருந்து யாராலும் விரட்ட முடியாது: ஜெயக்குமாருக்கு சசிகலா பதிலடி
பகிர்:

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலிலிருந்து யாராலும் விரட்ட முடியாது என்று ஜெயக்குமாருக்கு சசிகலா பதிலடி கொடுத்துள்ளார்.

அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு, தனி ஒரு மனிதராக யாரும் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

சேலத்தில் சசிகலா இரண்டாவது நாள் ஆன்மிகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சேலம் தாரமங்கலம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இங்கு ஏராளமான தொண்டர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு சசிகலா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, கொங்குமண்டல மக்கள் அன்பாக உபசரித்தார்கள். இது மன மகிழ்ச்சியை தருகிறது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்த கேள்விக்கு,
ஒருவர் அரசியலில் இருப்பதும் இல்லாமல் போவதும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு. தனி ஒரு மனிதராக யாரும் சொல்ல முடியாது. அதனால் தமிழக மக்களும், கழகத் தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது .

மேலும் தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் பெரும் ஆதரவு எனக்கு உள்ளது. தமிழக மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அது நிச்சயம் வெற்றி பெறும் எனவும் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.