தமிழ்நாடு

முறைகேடுகள் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் பெருமிதம்

DIN


சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் எவ்வித முறைகேடும் இல்லாமல் நடந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களோடு மக்களாக இருங்கள் என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், உள்ளட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதனை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக கருதி செயல்பட வேண்டும்.

மக்களால் முதன் முறையாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் நான்.  மக்களுக்கு சிறிய நன்மையை செய்தாலும் அது பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும்.  எவ்வித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

மேயர்கள், துணை மேயர்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்கிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT