தமிழ்நாடு

பளியன்குடி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள் திருவிழா கொண்டாட உயர்நீதிமன்றம் அனுமதி

தேனி மாவட்டம், பளியன்குடி அடிவாரத்தில் உள்ள மங்கலநாயகி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள் சித்திரை திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் கொண்டாட சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN


கம்பம்:  தேனி மாவட்டம், பளியன்குடி அடிவாரத்தில் உள்ள மங்கலநாயகி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள் சித்திரை திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் கொண்டாட சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே சுருளியாறு மின் நிலையம் செல்லும் சாலையில் பளியன்குடியில் அருள்மிகு ஸ்ரீ மங்கல நாயகி கண்ணகி தேவி கோயில் உள்ளது. இங்கு ஏப்ரல் 14, 15, 16 ஆகிய 3 நாள்கள் திருவிழா கொண்டாட கந்தவேல் என்பவர் காவல்துறையினரிடம் அனுமதி கோரினார்.

காவல்துறை அனுமதி மறுக்கவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விழா நடத்தவும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் ரிட் மனு தாக்கல் செய்தார்.


ஸ்ரீ மங்கலநாயகி கண்ணகி தேவி

வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் திருவிழா நடத்த உத்தவிட்டார், அதில் கூறியிருப்பதாவது, மங்கலநாயகி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள்கள் விழா அமைதியுடனும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் நடத்த வேண்டும், அருவறுக்கத் தக்க வார்த்தைகளை நடன நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தக்கூடாது, மாலை6 முதல் 11 வரை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள் மீறும் போது, மனுதாரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று தேதியில் நடத்த காவல் அதிகாரி அனுமதி வழங்கலாம், முதல்வர் நிவாரண நிதிக்கு மனுதாரர் ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர், குமுளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் நிதித்துறை செயலாளர், முதல்வர் நிவாரண நிதி, தலைமை செயலகம், சென்னை ஆகியோர்களுக்கு ஏப்.13 ல் அனுப்பி வைக்கப்பட்டது,  அதன்படி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT