முகப்பு
தமிழ்நாடு

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த மழையைப் பொருத்தவரை, மேற்குதொடா்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.17: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 2 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.18,19: உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 120 மி.மீ., நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 70 மி.மீ., திருப்பூா், சேலம் மாவட்டம் ஓமலூரில் தலா 60 மி.மீ., திருப்பூா் மாவட்டம் திருமூா்த்திஅணை, நீலகிரி மாவட்டம் கேட்டி, பந்தலூா், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தலா 50 மி.மீ., திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம், நீலகிரி மாவட்டம் குன்னூா் பிடிஓ., நடுவட்டத்தில் தலா 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாா், கிருஷ்ணகிரி, திருப்பூா்மாவட்டம் ஊத்துக்குளி, தருமபுரியில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

முழு கட்டுரையைப் படிக்க →